சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள்(2008) “சுட்டிலக்கம்” “பரீட்சை நடைபெறும் மண்டபம்”…

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2008)
பரீட்சை நடைபெறும் மண்டபம்…
Gemeinsschaftszentrum Affolten
Bodenacker 25
8049 Zürich.
(பிரதான புகையிரதநிலையத்திலிருந்து Tram 11 மூலம் Oerlikon பு.நிலையத்திற்கு வந்து Bus62 மூலம் Unter Affoltern இறுதி தரிப்பிடத்தில் இறங்கவும்.)

அன்புடையீர்,
1)இத்துடன் உங்களின் பரீட்சைக்கான சுட்டிலக்கம் அனுப்பப்படுகிறது.
2)பரீட்சைகள் குறிப்பிடப்பட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்படும்.
3)தயவுசெய்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15.06.2008) காலை 8.30மணிக்கு முன்பாக அனைவரும் மண்டபத்தில் வந்து வரவை பதிந்து கொள்ள வேண்டுகிறோம்.
4)உங்களுக்கான மதியபோசனம் (குறைந்த விலையில்) மண்டபத்தில் வழங்கப்படும்.
நீங்கள் செலுத்தவேண்டிய பரீட்சைக்கட்டணத்தை இதுவரை செலுத்தாவிடின் தயவு செய்து இறுதிநேர சிரமங்களை தவிர்க்குமுகமாக முன்கூட்டியே பணம் செலுத்தும் சீட்டில் செலுத்தி, துண்டை வைத்திருக்கவும்.

தயவு செய்து உங்கள் வயதை உறுதிப்படுத்துவதற்காக பரீட்சைச் சமயத்தில் உங்கள் அடையாளப்பத்திரத்தையும் கொண்டு வரவும். அதேபோல் நீங்கள் சுவிஸ் பாடசாலையில் கல்விகற்கும் ஆண்டை உறுதிப்படுத்துவதற்கான அத்தாட்சியை எமக்கு இதுவரை நீங்கள் அனுப்பாவிடில் அதனையும் கொண்டு வரவும். நன்றி.

***** தமக்கு இதுவரை விண்ணப்பப்படிவம் கிடைக்கப் பெறவில்லையென்ற சிலரின் முறைப்பாடு மற்றும் வேண்டுகோளுக்கிணங்க இதுவரை விண்ணப்பங்கள் கிடைக்காத உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாராவது பங்குகொள்ள விரும்பினால் தயவுசெய்து உடனடியாக எம்முடன் (076.3681546) தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம். *****

வேறு மேலதிக விபரங்கள் தேவைப்படின் தயவு செய்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 076- 368 15 46, 079 -624 90 04
நன்றி
இங்ஙனம்,
தமிழீழ மக்கள் கல்விக்கழகம்

Comments

Got something to say?